உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நுாறுநாள் வேலை திட்ட தொழிலாளர்

ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நுாறுநாள் வேலை திட்ட தொழிலாளர்

டி.என்.பாளையம் : டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே கணக்கம்பா-ளையம் ஊராட்சியில், நுாறு நாள் வேலை கேட்டு, நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு ஊராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கணக்கம்பாளையம் ஊராட்-சியில், 300க்கும் மேற்பட்டோர், நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வந்தோம். சில நாட்களாக வேலை இல்லாததால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி தலைவரிடம் தொடர்ந்து முறையிட்டோம். இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில், 25 பேருக்கு மட்டும் வேலை கொடுப்பதாக கூறுகின்றனர். மீதியுள்ளோரின் வாழ்வாதா-ரத்துக்கு என்ன வழி? அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி