உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நபிகள் பற்றி தவறான பதிவு நடவடிக்கை கோரி மனு

நபிகள் பற்றி தவறான பதிவு நடவடிக்கை கோரி மனு

ஈரோடு : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக, ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: அனைத்து சமய மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழும் நிலையில், சில ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக பிளவுப-டுத்தும் பணி செய்கின்றனர். நபிகள் நாயகம் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து, பேஸ்புக்கில் தவறாக சித்தரித்து, 'பா.ஜ., தகவல் தொழில் நுட்ப பிரிவு அன்புடன் அன்புவேல்' என்பவர் வெளியிடுகிறார். தவிர குன்னத்துார் பகுதியை சேர்ந்த 'குன்-னத்துார் முதல்வர்' எனும் முகநுாலில் பா.ஜ., ஊடகத்துறை செயலர் நந்தகுமாரும் தவறான பதிவை வெளியிடுகிறார். பதற்-றத்தை ஏற்படுத்தும் இந்நபர்களை கைது செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ