உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாசு கட்டுப்பாட்டு வாரிய குறைதீர் கூட்டம்

மாசு கட்டுப்பாட்டு வாரிய குறைதீர் கூட்டம்

ஈரோடு : ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் தலைமை வகித்து, மனுக்களை பெற்றார். ஒவ்வொரு மாத மும், 5ம் தேதி குறைதீர் கூட்டம் நடத்தி, புகார் மனுவாக பெறுகின்-றனர். நேற்றைய கூட்டம் குறித்து உதவி செயற்பொறியாளர் செல்-வகணபதி கூறியதாவது:இந்தாண்டில், ஒவ்வொரு, 5ம் தேதியும் குறைதீர் கூட்டம் நடத்-தப்படுகிறது. ஏப்ரல், மே மாதம் லோக்சபா தேர்தல் நடத்தை விதியால் நடத்தப்படவில்லை. இருப்பினும் ஆன்லைனில் வரும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நேற்றைய கூட்டத்தில் இருவர் நேரில் வந்து மனு வழங்கினர். இந்தாண்டில் இதுவரை நடந்த கூட்டத்தில், 21 புகார் மனு பெறப்பட்டு, அனைத்து மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், கழிவுநீரை முறையாக சுத்திக-ரிக்காமல் வெளியேற்றுதல், அரசின் விதிகளை கடைபிடிக்காதது போன்றவற்றின் கீழ், 138 சாய, சலவை, பிரிண்டிங், தோல் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ