உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் வாரிய ஆபீசில் திருடியவர் கைது

மின் வாரிய ஆபீசில் திருடியவர் கைது

கோபி, கோபி அருகே காசிபாளையத்தில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு வளாகத்தில் அலுமினிய மின் கம்பி வைக்கப்பட்டிருந்தது. மர்ம ஆசாமி ஒருவர் துண்டு துண்டாக வெட்டி, சாக்கில் அடைத்து, சைக்கிளில் நேற்று அதிகாலை திருடி சென்றார். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் லட்சுமணன், மின்வாரிய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அலுமினிய கம்பியை சைக்கிளுடன் போட்டுவிட்டு ஆசாமி ஓட்டம் பிடித்தார்.உதவி மின் பொறியாளர் கிருஷ்ணகுமார், 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அலுமினிய கம்பி, சைக்கிளை, கடத்துார் போலீசில் ஒப்படைத்து புகாரளித்தார். விசாரித்த போலீசார், கோபி அருகே சிங்கிரிபாளையத்தை சேர்ந்த செல்வனை, 53, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை