உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 150 கிலோ போதை பொருள் பறிமுதல் மூன்று பேர் கைது

150 கிலோ போதை பொருள் பறிமுதல் மூன்று பேர் கைது

ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் குமார். இவர் மகன் ரவி, 29, மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் உள்ளன. ரவியை ஈரோடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், புங்கம்பாடி சாணார்பாளையம் பகுதியில் ரவி தங்கி இருப்பதாக, ஈரோடு கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சாணார்பாளையம் பகுதியில் தேடி வந்தனர். அங்குள்ள ஒரு வீட்டில் ரவி தங்கி இருப்பது தெரியவந்தது. வீட்டை முற்றுகையிட்ட போலீசார், ரவியை பிடித்ததுடன் வீட்டையும் சோதனையிட்டனர். அப்போது, 75 பண்டல்களில், 150 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 45 லட்சம் ரூபாய். மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், ரவி, அவரது தம்பி சங்கர், 25 மற்றும் ஈரோட்டை சேர்ந்த சூர்யா, 24, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை