உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரேஷன் அரிசி கடத்திய 156 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 156 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 5 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கி வைத்திருத்தல், கள்ள சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக, 135 வழக்குகள் பதிவு செய்து, 32,300 கிலோ ரேஷன் அரிசியை, மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ஈடுபட்டதாக, 156 பேரை கைது செய்து, 52 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதுபோல அரசின் மானிய விலை வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை வியாபாரத்துக்கு பயன்படுத்தியதாக, 13 வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பத்து தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில், இன்று பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்க உள்ளது.முகாமில், புதிய ரேஷன் கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், கைபேசி எண் இணைத்தல் தொடர்பாக விண்ணப்பிக்கலாம். பொது வினியோக திட்ட அதிகாரிகள், வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்பார்கள். தாலுகா வாரியாக, ஈரோடு - திண்டல் ரேஷன் கடை, பெருந்துறை - தென்முகம் வெள்ளோடு, மொடக்குறிச்சி - கஸ்பாபேட்டை-2, கொடுமுடி - வேலாயுதம்பாளையம், கோபி-நாததேவம்பாளையம், நம்பியூர்-கூடக்கரை, பவானி-பருவாச்சி, அந்தியூர்-கெட்டிசமுத்திரம்-1, சத்தியமங்கலம்-கேர்மாளம், தாளவாடி-மண்டேசுவாமி கோவில் பகுதி ரேஷன் கடையில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ