உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி

28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில் ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில், 28 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.இதுபற்றி பெற்றோர்கள் கூறியதாவது: பள்ளியில் மாணவர்களின் கல்வி தரம், உள் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து புகார் கொடுக்க, ஆலோசிக்க, தகவல் தெரிவிக்க தலைமை ஆசிரியர்கள் இல்லை. எனவே மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக மேம்பாட்டில் பின்-னடைவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் பணியிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி