உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு

ஈரோடு தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு

ஈரோடு: ஈரோடு லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை, கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது.அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மனு பரிசீலனையின்போது, மூன்று நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கூறி, தள்ளுபடி செய்ய தி.மு.க., தரப்பில் வலியுறுத்தி, ஆட்சேபனை கடிதம் கொடுத்தனர். ஆட்சேபனை ஏற்புடையதல்ல, எனக்கூறிய தேர்தல் அதிகாரிகள், அவரது மனுவை ஏற்றனர்.ஈரோடு தொகுதியில், 44 வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் மூன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இரு வேட்பாளர்களின் மாற்று வேட்பாளர் மற்றும் இரண்டு மனுக்களை திரும்ப பெற்றதால், 37 பேர் தற்போது உள்ளனர்.மனு வாபஸ் பெற நாளை கடைசி நாள். நாளை மதியம், 3:00 மணிக்கு சின்னங்களுடன், இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட தேர்தல் பிரிவு வெளியிடும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை