உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திருமணமான 8 நாளில் வாலிபர் விபரீத முடிவு

திருமணமான 8 நாளில் வாலிபர் விபரீத முடிவு

பவானி : பவானி, காவேரி வீதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் உதய பிரகாஷ், 25; பவானி, வேதநாயகி அம்மன் கோவில் சன்னதி அர்ச்சகர். இவருக்கும் கோவை, பேரூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கடந்த மாதம், 27ம் தேதி திருமணம் நடந்தது.உதய பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள், அவரது வீட்டில் நேற்று பேசிக் கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென படுக்கை அறையில் நுழைந்து, உதய பிரகாஷ் கதவை தாழிட்டு கொண்டார். உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, துாக்கில் தொங்கியபடி இருந்தார்.அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. திருமணமான எட்டு நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது, உறவினர்கள் மத்தியில், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ