உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பயிறுக்கு இழப்பீடு கேட்டுவனச்சரகரிடம் முறையீடு

பயிறுக்கு இழப்பீடு கேட்டுவனச்சரகரிடம் முறையீடு

டி.என்.பாளையம்;டி.என்.பாளையம் வனச்சரக பகுதியில் சிறுத்தை, யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இதில் யானை, சிறுத்தை உணவு தேடி வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுவது வழக்கமாக உள்ளது. புலி கால்நடைகளை வேட்டையாடுவதும் நடக்கிறது. இதனால் குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கொண்டையம்பாளையம், சுண்டக்கரடு உப்பு பள்ளம், அம்பேத்கர் காலனி, எருமை குட்டை பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கின்றனர்.இந்நிலையில் விலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க அகழி, வேலி அமைக்க வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், பங்களாபுதுார் வனத்துறை அலுவலகத்தில், வனச்சரகர் மாரியப்பனிடம் மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ