உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாட்டு துப்பாக்கியுடன்பழங்குற்றவாளி கைது

நாட்டு துப்பாக்கியுடன்பழங்குற்றவாளி கைது

ஈரோடு:நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த பழங்குற்றவாளியை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து, பவானிசாகர் போலீசில் ஒப்படைத்தனர்.ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கொத்தமங்கலம் பரிசல் துறையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு துப்பாக்கியுடன் (சிங்கிள் பேரல்) ஒரு வாலிபர், வனப்பகுதிக்குள் நுழைய முற்பட்டார். அவரை பிடித்து விசாரித்ததில், சத்தியமங்கலம், ராஜன் நகர், புது குய்யனுாரை சேர்ந்த சின்னதுரை, 29, என தெரிந்தது. பவானிசாகர் போலீஸ் ஸ்டேஷனில் அவரை ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின் கைது செய்த சின்னதுரையை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர். சின்னதுரை மீது பவானிசாகர், கோவை போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு, கோபி மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா விற்றது உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை