உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜீப் மீது பைக் மோதி வாலிபர் பலி

ஜீப் மீது பைக் மோதி வாலிபர் பலி

சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகே செண்பகபுதுார் தங்கநகரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஹரி, 18; தனியார் கார்மெண்ட்ஸ் ஊழியர். இவரின் நண்பர் நிவேஸ். இருவரும் யமாஹா ஆர்-15 பைக்கில் செண்பகபுதுார் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றனர். எஸ்.ஆர்.டி., கார்னர் அருகில் எதிரே வந்த அர்மதா கிராண்ட் ஜீப் மீது டூவீலர் நேருக்குநேர் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஹரி இறந்தார். நிவேஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை