உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டு கேட்ட முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்: ஈரோட்டில் பரபரப்பு

ஓட்டு கேட்ட முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்: ஈரோட்டில் பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 31) ஈரோடு மார்க்கெட் பகுதியில் பிரசாரம் செய்த போது, காய்கறி விற்பனை செய்யும் பெண் ஒருவர் தன் பெயர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச்31) உழவர் சந்தை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களிடையே திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது காய்கறி வியாபாரம் செய்த விஜயா என்ற பெண், முதல்வரிடம் பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o3lsgqwm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, எனக்கு மகளிர் உரிமை தொகை வழங்கவில்லை. எனது கணவர் அரசு ஊழியர் என கூறி தர மறுக்கின்றனர், என்றார். உடன் முதல்வர் ஸ்டாலின், 'விதிகளின் படித்தான் தரப்படுகிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன், என்றார். பின்னர் அந்த பெண் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எனது பெயர் விஜயா. மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தும், இதுவரை பணம் வரவில்லை. எனது கணவர் தூய்மை பணியாளர் என காரணம் கூறுகின்றனர். இதற்கிடையில் கட்சியினர் என்னை சந்தித்து விபரம் கேட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Hariseenivasan Sunchan
ஏப் 01, 2024 08:56

Cheating scheme, before election all women will get Rs /- Committed by CM Now only eligible Eligible alone not voted DMK Expected every one will get


Writer
ஏப் 01, 2024 07:14

வருஷத்துக்கு முன்னால் சொன்ன அந்த லட்சம் வரட்டும் அப்புறம் இந்த ஆயிரம் ஓவாயை தருவோம்


Arachi
ஏப் 01, 2024 06:42

எவ்வளவு பெரிய திட்டம், ஒரு வீட்டில் குடும்ப கணக்குக்கே தடுமாறும் இதுதான் வாய்ப்பு என்று சிந்து பாடுகிறார்கள் தவறு இருந்தால் திருத்திக் கொள்ளும் கட்சிகள்தான் திராவிட இயக்கங்கள் சீனியர் சிட்டிசனுக்கு ரயிலில் இருந்த டிக்கெட் சலுகைகளை எடுத்த பிஜேபியை கண்டிப்பாக டெபாசிட் டை இழக்கச் செய்வதுதான் நம் கடமை


Sami Sam
மார் 31, 2024 17:18

ஒரு காலத்தில் ரூபாய்க்கு படி அரிசி போடவில்லையென்றால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்று மேடையில் கூறினார்


Mani . V
மார் 31, 2024 17:14

பாவம் அந்த அம்மா நீண்ட காலம் வாழணும் - ரௌடிகளிடம் இருந்து தப்பி


ஆரூர் ரங்
மார் 31, 2024 16:52

வாக்குறுதிகளை அளிக்கும் போது இந்த தகுதியுடைய என்ற வார்த்தை மறந்து போயிருந்ததா?


Rajathi Rajan
மார் 31, 2024 13:14

ithula enna paraparappu iruku, avanka kettu irukanga? ivar pathil solli irukar, thats all


subramanian
மார் 31, 2024 12:50

நீ திமுக வா இல்லையா என்பதை அறிந்து கொண்டு தொகை வழங்கப்படும்


Indian
மார் 31, 2024 12:43

He may tell her to ask to KALIGER KARUNANIDHI


S. Gopalakrishnan
மார் 31, 2024 12:14

தெருவில் காய்கறி விற்கும் பெண்மணிக்கு தரமுடியாதென்றால் வேறு யாருக்குத்தான் அருகதை உண்டு ?


மேலும் செய்திகள்



புதிய வீடியோ