உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏலச்சீட்டு நடத்தி மோசடி ௨ ஆசிரியைகள் மீது புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி ௨ ஆசிரியைகள் மீது புகார்

ஈரோடு: ஈரோடு, காசிபாளையம், முத்தம்பாளையம் திட்டம்-2ஐ சேர்ந்த சோமேஸ்வரன் மற்றும் சிலர், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:நான், கோபி ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக பணி செய்து, 2017 ல் பணி ஓய்வு பெற்றேன். அப்போது துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியைகளான குடியரசி, பிரபா அறிமுகமாகினர். இருவரும் சேர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஏலம் நடக்கும் வகையில், 12 நபர்கள் சேர்ந்து, 12 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு நடத்துகிறோம், எனக்கூறி என்னை சேர்த்தனர்.முதல் ஏலத்தொகையை, 2017 ஏப்.,16ல் ஒரு லட்சம் ரூபாயை வழங்கினேன். முதல் ஏலச்சீட்டு ஏஜெண்டுக்கு என வைத்து கொண்டனர். 11 ஏலத்தொகையும் கொடுத்து, 12வதாக, 2022 மே, 12ல் 80,000 ரூபாய் கொடுத்தேன். எனக்கு சேர வேண்டிய, 11 லட்சத்தை தரவில்லை.அதுபோல அடுத்த சீட்டாக, 10 நபர், 10 மாதம் எனக்கூறி, 10 மாதமும் தொகை செலுத்தினேன். அப்போதும் பணம் தரவில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டுகின்றனர். நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி