உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

அரங்கநாதர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு

ஈரோடு:வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ய காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. அந்த வகையில் வைகாசி முதல் நாளான நேற்று, ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. கோவிலுக்கு வந்த திரளான பக்தர்கள், கொடி மரத்தை வணங்கி, 27 முறை பிரகாரத்தை வலம் வந்தனர். அப்போது எண்ணிக்கைக்காக கைகளில், 27 பூக்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரம் முன் வைத்தனர். வலம் வந்த பிறகு கஸ்துாரி அரங்கநாதரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை