உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரும்பு குப்பை தொட்டி நன்கொடையாக வழங்கல்

இரும்பு குப்பை தொட்டி நன்கொடையாக வழங்கல்

பெருந்துறை;பெருந்துறை டவுன் பஞ்சாயத்து ஒன்பதாவது வார்டில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய, 40,000 ரூபாய் மதிப்பிலான இரும்பு குப்பை தொட்டி நேற்று பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் வளர்மதி செல்வராஜ் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயக்குமார் பயன்பாட்டுக்கு வழங்கினார்.பெருந்துறை அ.தி.மு.க., செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி, மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் அவை தலைவர் ஜெகதீஷ், டவுன் பஞ்., 11வது வார்டு கவுன்சிலர் கோமதி சீனிவாசன், பெருந்துறை அ.தி.மு.க., வார்டு செயலாளர்கள் ஆண்டமுத்து, பெட்டிசன் மணி, குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை