உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழையின்றி விவசாயிகள் தவிப்பு

மழையின்றி விவசாயிகள் தவிப்பு

ராசிபுரம்: நாமக்கல் பகுதியில் முக்கியமாக ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் பங்குனி மாதம், 3 அல்லது 4வது வாரத்தில் கோடை மழை பெய்வது வழக்கம். முதல் கட்டமாக பங்குனி மாதத்தில் பெய்யும் கோடை மழையில் தான், மானாவாரி விவசாயிகள் நிலத்தை உழுது தயார் செய்து விட்டு அடுத்த மழைக்கு காத்திருப்பர். சித்திரை மாதத்தில் மழை பெய்ததும் நிலக்கடலை, எள் உள்ளிட்ட மானாவாரி பயிர்களை பயிரிடுவர். ஆனால், தற்போது பங்குனி மாதம் முடியும் நிலையில், இதுவரை கோடை மழை பெயரளவிற்கு கூட பெய்யவில்லை.முக்கியமாக, ஆர்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில் விழா தொடங்கும் சமயத்திலும், மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் தீ மிதி விழா சமயத்திலும் கோடை மழை நிச்சயம் பெய்து விடும். ஆனால், இந்தாண்டு அதுவும் நடக்கவில்லை. இதனால், இப்பகுதி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ