உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காவிரி கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையில் வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.மேட்டூர் அணை நீர்மட்டம், 103 அடியை கடந்துள்ளது. நீர்வ-ரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உள்ளது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை விரைவில் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும். அதேசமயம் ஆடிப்பெருக்கை முன்-னிட்டு, காவிரியாற்றில் இன்று முதல், ௫,௦௦௦ கன அடி நீர் திறக்-கப்படுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்-பள்ளம், சின்னபள்ளம், நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, கோனேரிபட்டி, சித்தார், காடப்பநல்லுாரில் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு, அம்மாபேட்டை பேரூ-ராட்சி சார்பில், ஒலிபெருக்கி மூலம் நேற்று வெள்ள அபாய எச்ச-ரிக்கை விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ