உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மயான பூமி குறியீடு நீக்கம்:ஆய்வு செய்ய வலியுறுத்தல்

மயான பூமி குறியீடு நீக்கம்:ஆய்வு செய்ய வலியுறுத்தல்

ஈரோடு;அரச்சலுார் அருகே பூசாரியூர் கிராம மக்கள், 50க்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: அரச்சலுார் அருகே கிராம கணக்கில் பாறை என்ற வகைப்பாட்டில் இடம் உள்ளது. இந்த பூமியை பூசாரியூர் கிராம மக்கள் பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதை அறிந்த வருவாய் துறை, இவ்விடத்தை வரைபடத்தில் மயான குறியீடு செய்திருந்தது. சமீபமாக மயான குறியீட்டை நீக்கி, சிலர் பயன்பாட்டில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இவ்விடம் மயான பூமி என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ