உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 7, 8ல் கைத்தறி கண்காட்சி

7, 8ல் கைத்தறி கண்காட்சி

ஈரோடு, ஈரோடு மாவட்ட கைத்தறி துறை சார்பில், நாளை, 8ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனை நடக்கிறது. இதில் நெசவாளர்களுக்கு இ-முத்ரா கடன் தொகை வழங்குதல், மானியத்துடன் கூடிய வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்குதல், முதியோர் மற்றும் குடும்ப ஓய்வூதிய திட்ட ஆணை வழங்குதல், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொகை வழங்குதல் நடக்கிறது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், கைத்தறி ரகங்களை பிரபலப்படுத்தும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், சிவகிரியில் கைத்தறி நெசவாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாமும் நாளை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை