உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வூதியர் வலியுறுத்தல்

கூடுதல் ஓய்வூதியம் வழங்க ஓய்வூதியர் வலியுறுத்தல்

ஈரோடு: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்-கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்-குமார், மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பேசினர்.தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவப்படி, 1,000 ரூபாய் மத்திய அரசு வழங்கு-வது போல வழங்க வேண்டும். அனைத்து வியாதிகளுக்கும், அனைத்து மருத்துவமனைகளிலும் காசில்லா மருத்துவம் வழங்கு-வதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற பிறகு நிலு-வையில் உள்ள குற்றச்சாட்டுக்களை விரைந்து முடிப்பதுடன், அவர்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியம் உட்பட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை