உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

ஈரோடு, ஈரோடு திருநகர் காலனியில் ஞானவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம், தசதானம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ