உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு

மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு

ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளை கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சாவித்திரி, மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் ராஜூ முன்னிலை வகித்தனர். அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:மாநில அளவில், 14.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக, அரசு ஆவணங்கள் கூறுகிறது. இவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும், சமூக நல பாதுகாப்பு துறையும் உதவித்தொகை வழங்குகிறது.கடந்த, 2023 ஏப்.,க்கு பின், 1.25 லட்சம் பேர் வரை புதிதாக பதிவு செய்து, ஆவண சரிபார்ப்பு என அனைத்தும் நிறைவடைந்தும், அவர்களுக்கு உரிய உத்தரவு வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷனில், 35 கிலோ அரிசி மாதம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்திலும் பணி வழங்க வேண்டும். சமூக நல பாதுகாப்பு துறையில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யும் இணைய பதிவு, 2 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கணக்கில் கொள்ளாமல், வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., என முறைப்படி விசாரித்து, உதவித்தொகை, உரிய சலுகை கிடைக்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.பின், அதிகாரிகள் கூறுகையில், ''ஈரோடு மாவட்டத்தில், 13,804 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் சமீபத்தில் விண்ணப்பித்த, 509 பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.மேலும், 237 பயனாளிகள் பெயர் சேர்க்கப்பட்டு, நிதி ஒதுக்கீட்டுக்காக காத்துள்ளது. 272 பேருக்கு மட்டும், கையெழுத்து, ஆதார் உள்ளிட்ட இணைப்பு குறைபாட்டால் நிலுவையில் உள்ளது. விரைவில் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றனர்.கலெக்டர் அலுவலகத்தில், அனைவரும் தங்கும் வகையில் போலீசாரிடம் தள்ளுமுள்ளு செய்து முன்னேற முயன்றனர். அதற்குள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லாவிடம், போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பேசி, தங்களது கோரிக்கைகளை வழங்கினர். அரசுக்கு அனுப்புவதாக அவர் கூறவே, அனைவரும் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி