உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

மொபைல் போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையம் தமிழன் வீதியை சேர்ந்த மக்கள் மனு வழங்கி கூறியதாவது:பி.மேட்டுப்பாளையம் தமிழன் வீதி பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். குடியிருப்பு பகுதியின் நடுவே, தனியார் இடத்தில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த, 6ல் சாலை மறியலில் ஈடுபட்டோம். போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தற்போது அப்பணி மீண்டும் துவங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் மொபைல் போன் டவர் அமைக்க அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை