உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூறாவளியால் வாழை சேதம் விவசாயிகளுக்கு நிவாரணம்

சூறாவளியால் வாழை சேதம் விவசாயிகளுக்கு நிவாரணம்

ஈரோடு: தாளவாடி, சத்தி, பவானிசாகர், அந்தியூர், அம்மாபேட்டை வட்டாரங்களில் கடந்த, 1ம் தேதி முதல், 7ம் தேதி வரை சூறாவளி காற்று, மழையால் வாழை மரங்கள் சேதமாகின. தோட்டக்கலை, வருவாய் துறை அலுவலர்கள் கூட்டாய்வில், 269 விவசாய தோட்டங்களில், 120 ெஹக்டேர் பரப்பில் வாழை மரங்கள் சேதமானது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், சேதார மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து, கலெக்டர் மூலம் வருவாய் துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் மரகதமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ