உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8 பஸ்களில் ஏர்ஹார்ன் அகற்றம்:ரூ.80 ஆயிரம் அபராதம் வசூல்

8 பஸ்களில் ஏர்ஹார்ன் அகற்றம்:ரூ.80 ஆயிரம் அபராதம் வசூல்

ஈரோடு;அரசு, தனியார் பஸ்கள், மினி பஸ்களில் ஏர் ஹார்ன் பயன்படுத்தப்படுகிறதா என்று, ஈரோடு மேற்கு ஆர்.டி.ஓ., பதுவைநாதன் தலைமையிலான வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சுரேந்திரகுமார், சிவகுமார், கதிர்வேல் ஆகியோர், ஈரோடு பஸ் ஸ்டாண்ட்டில் நேற்று மாலை, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இரு அரசு பஸ்கள் உட்பட எட்டு பஸ்களில் ஏர் ஹார்ன்களை அகற்றி தலா, 10,000 ரூபாய் என, 80,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.'வாகனங்களில் ஏர் ஹார்ன்கள் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவு. இனி ஏர் ஹார்ன் பயன்படுத்தும் பஸ்களுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதுபோன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்படும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை