உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அனுமதியின்றி வைக்கப்பட்ட ராயன் பிளக்ஸ் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட ராயன் பிளக்ஸ் அகற்றம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், பொது இடங்களில் விளம்பர பேனர்-களை வைக்க, 17 நிபந்தனைகளை மாநகராட்சி நிர்வாகம் அறி-வித்துள்ளது. இதை மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்-படும் என்றும் எச்சரித்துள்ளது.இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இன்று வெளியாகிறது.ஈரோட்டில் இந்த சினிமா படம் வெளியாகும் தியேட்டர் பகு-தியில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பிரசாந்த் வீதியில் ஏராளமான பிளக்ஸ் பேனர்களை, ரசிகர்கள் நேற்று வைத்தனர்.மாநகராட்சி பொறியாளர் கிருபாகரன் தலைமையிலான அதிகா-ரிகள், வடக்கு காவல்நிலைய போலீசார் இவற்றை அகற்ற எச்ச-ரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் விதிமீறி வைக்கப்பட்-டிருந்த பிளக்ஸ் பேனர்களை, தியேட்டர் ஊழியர் மற்றும் ரசி-கர்கள் தாமாக முன்வந்து அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை