உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 48வது வார்டில் அடிப்படை வசதி செய்ய கோரிக்கை

48வது வார்டில் அடிப்படை வசதி செய்ய கோரிக்கை

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி, 48வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், அடிப்படை வசதி கோரி, வார்டு மக்கள், ஆணையாளர் மணீ-ஷிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தார்ச்சாலை மற்றும் கான்கீரிட் சாலை சேத-மடைந்துள்ளது. இவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும்.பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே உடைந்திருக்கும் மேன் ஹோல்களை மாற்ற வேண்டும். ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீரை முறையாக வினியோகிக்க எடுக்க வேண்டும். பழுதான தெருவிளக்குகளுக்கு பதிலாக, புது விளக்குகளை பொருத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி-வித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ