உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்

கொடுமுடி,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கொடுமுடி வட்டார வள மையத்துக்கு உட்பட்ட, அனைத்து அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்த, பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம், நகப்பாளையம் ஊ.ஒ.து., பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் இளங்கோ தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசார காணொலி திரையிடப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நான்கு கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி