உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

காங்கேயம்:மாமனாரை கத்தியால் குத்தி தலைமறைவான மருமகனை, போலீசார் கைது செய்தனர்.காங்கேயம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, 59, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஊழியர். இவரின் மகள் நிவேதா, 28; இவரின் கணவர் வள்ளியரச்சலை சேர்ந்த பிரபாகரன், 38; தம்பதிக்கு, ௧௦ வயதில் மகன் உள்ளார்.சில வருடங்களாக தம்பதி இடையே தகராறு இருந்தது. பிரபாகரன் குடிப் பழக்கத்தை கைவிடாததால், சில மாதங்களாக மகனுடன், தந்தை வேலுச்சாமி வீட்டில் வசித்து வருகிறார்.மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்கக்கோரி மாமனார் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதை வேலுச்சாமி கண்டிக்கவே, அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இந்நிலையில் பிரபாகரனை, காங்கேயம் போலீசார் கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ