உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈர சாம்பல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் அவதி

ஈர சாம்பல் ஏற்றிச் செல்லும் லாரிகளால் அவதி

பவானி : மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து, நிலக்கரி ஈரச்சாம்பலை ஏற்றிச் செல்லும் லாரிகள், வழியெங்கும் கொட்டி செல்வதால் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.மேட்டூர் அனல் மின் நிலையத்தில், மின்னுற்பத்திக்காக நிலக்கரி எரிக்கப்பட்டு, அதன் சாம்பல் லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மூலப்பொருளாக எடுத்து செல்லப்படுகிறது. பவானி-மேட்டூர் ரோடு வழியாக செல்லும் லாரிகளில் இருந்து, ஈரச்சாம்பலில் தண்ணீர் வடிந்தபடியே செல்கின்றன. தண்ணீருடன் கலந்து ரோட்டில் விழும் சாம்பல் காய்ந்து காற்றில் பறக்கிறது. இதனால் கண்களில் விழுவதோடு, சுவாசிக்கும்போது சுவாச கோளாறையும் ஏற்படுத்துகிறது. ஒரு சில சமயங்களில் மக்களும் லாரியை துரத்தி பிடித்து, சாம்பலில் இருந்து தண்ணீர் வடியும் வரை ஒரே இடத்தில் நிறுத்தி, பின்னர் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். ஆனாலும் ஈரச்சாம்பல் லாரிகளின் விதிமீறல் தொடர்கிறது. இவ்வாறு செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ