உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மஞ்சள் விலை 15 நாளில் குவிண்டாலுக்கு ரூ.2,000 சரிவு

மஞ்சள் விலை 15 நாளில் குவிண்டாலுக்கு ரூ.2,000 சரிவு

ஈரோடு : ஏற்றுமதி, விற்பனை குறைவால் மஞ்சள் விலை, 15 நாளில் குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது.ஈரோடு மார்க்கெட்டில் கடந்த பிப்., மாதம் குவிண்டால், 9,000 ரூபாய் முதல், 13,500 - 14,000 ரூபாயாக இருந்த மஞ்சள் விலை, மார்ச், 13ல், 15,557 ரூபாய் முதல், 21,369 ரூபாயை தொட்டது. அதன்பின், 20 நாட்களுக்கு மேலாக, 20,000 ரூபாயில் நீடித்து பின் குறைந்தது. மே மாதம், 18,800 ரூபாய் வரை சரிந்து பின், 14,000 ரூபாய் முதல், 17,500 ரூபாய் வரை சென்றது. தற்போது மீண்டும் விலை சரிந்துள்ளது.இதுபற்றி ஈரோடு மஞ்சள் வணிகர் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:விவசாயிகள் மஞ்சளை இருப்பு வைத்து, விலை உயரும்போது விற்பர். சில ஆண்டாக விலை உயராததால், பெரும்பாலானோர் இருப்பு மஞ்சளை விற்று விட்டனர். இந்த நிலையில் கடந்த, 15 நாட்களாக மீண்டும் மஞ்சள் விலை குறைந்து, 2,000 ரூபாய் வரை குறைந்து, 15,000 ரூபாய் முதல், 16,000 ரூபாய்க்குள் வந்துள்ளது.இதற்கு விலை அதிகரிப்பே முக்கிய காரணம். மேலும் தேசிய அளவில் மஞ்சளின் தேவை குறைந்துள்ளது. ஏற்றுமதியும், 20 சதவீதம் வரை குறைந்ததால் சரிவு ஏற்பட்டுள்ளது. இனி தேவை அடிப்படையில் மட்டும் விலை உயரலாம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை