உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கர்ப்பிணியை தாக்கிய இருவர் தலைமறைவு

கர்ப்பிணியை தாக்கிய இருவர் தலைமறைவு

அந்தியூர், அந்தியூர் அருகே ஜே.ஜே.நகரை சேர்ந்த சக்திவேல் மனைவி தமிழ்செல்வி, 26; இருவரும் கூலி தொழிலாளர்கள். தமிழ்செல்வி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். தமிழ்செல்வியின் உறவினரான குருநாதனின் மகள் சுபாஷினி. இவர் வளர்த்த கோழி இறந்து விட்டது. இது தொடர்பாக சுபாஷினியிடம், தமிழ்செல்வி விசாரித்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த குருநாதன், வல்லரசு ஆகியோர், தமிழ்செல்வியை கல்லால் தலையில் தாக்கி தள்ளிவிட்டுள்ளனர். இதை தட்டிக்கேட்ட சக்திவேலையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின்படி வழக்குப்பதிந்த அந்தியூர் போலீசார், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை