உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காளிங்கராயனில் குறைந்தபட்ச தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

காளிங்கராயனில் குறைந்தபட்ச தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

ஈரோடு:ஈரோடு உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் ராமேஸ்வரன், செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது:காளிங்கராயன் பாசனப்பகுதியில், 15,300 ஏக்கருக்கு மேல் பயிர் செய்யப்பட்டுள்ளது. ஏப்.,24 வரை தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், அணையில் தண்ணீர் இருப்பு குறைவு எனக்கூறி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பாசனப்பகுதியில், 90 சதவீதம் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பாதி பயிராக, குலை தள்ளிய நிலையில் உள்ளது. இச்சூழலில் போதிய தண்ணீர் திறக்கப்படாவிட்டால், அனைத்தும் கருகி விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திப்பார்கள். அதிகாரிகள் கள ஆய்வு செய்து, குறைந்தபட்ச அளவாவது தண்ணீர் திறந்து, பயிர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை