உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வ.உ.சி., மைதானத்தில் ஆய்வு

வ.உ.சி., மைதானத்தில் ஆய்வு

ஈரோடு, ஈரோட்டில், 7.57 கோடி ரூபாயில் புனரமைக்கப்-பட்ட, வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தை, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, பயன்பாட்டுக்கு இன்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி அங்கு நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்து வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்-குமாரிடம் கேட்டறிந்தார். பாடப்புத்தகம் வழங்கல்ஈரோடு, ஆக. 2-ஈரோடு எஸ்.கே.சி., சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., படிக்கும், 50 மாணவ, மாணவிகளுக்கு, ஈரோடு லேடிஸ் சர்க்கிள்-78 சார்பில், தலைவர் நித்யா பிரவீன் தலைமையில் இலவசமாக நேற்று பாடப்புத்தகம் வழங்கினர். முன்னாள் தலைவர் சித்தியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி, லேடீஸ் சர்க்கிள் உறுப்பினர்கள் சவுமியா நந்தினி, ராகசுருதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை