உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நுால் மில்லில் தீ விபத்து தொழிலாளி கருகி பலி

நுால் மில்லில் தீ விபத்து தொழிலாளி கருகி பலி

காங்கேயம்: வெள்ளகோவில் மு.பழனிச்சாமி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருக்கு சொந்தமான நுால் மில், வெள்ளகோவிலில் கோவை சாலையில் உள்ளது. இங்கு, 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மில்லில் நேற்று மதியம் பஞ்சு அரைக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் தீப்பிடித்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் பற்றி சில வினாடிகளில் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விருதுநகர், நரிக்குடியை சேர்ந்த தொழிலாளி மனோஜ், 20, தப்பி செல்ல முடியாமல் தீயில் சிக்கியதில் கருகி பலியானார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ