உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர், பச்சைமலையில் 13 ஜோடிகளுக்கு திருமணம்

பாரியூர், பச்சைமலையில் 13 ஜோடிகளுக்கு திருமணம்

கோபி: வைகாசி முகூர்த்த நாள் என்பதால், கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் மற்றும் பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று ஒரே நாளில், 13 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.கோபி அருகே, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, மாசி மாதங்களில் முகூர்த்த நாட்களில், திருமண நிகழ்வுகள் களைகட்டும். அங்கு திருமணம் செய்ய விரும்பும் மணமக்கள், வி.ஏ.ஓ., சான்று, திருமண பத்திரிக்கை, ஆதார் விபரங்களை கொடுத்து, முன்பதிவு அடிப்படையில் திருமணம் செய்கின்றனர்.இந்நிலையில், வைகாசி மாதத்தின் முகூர்த்த நாள் என்பதால், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நேற்று ஒரே நாளில் மூன்று ஜோடிகளுக்கு காலை, 5:00 முதல், 6:00 மணிக்குள் திருமணம் நடந்தது. இதேபோல், பச்சைமலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை, 4:30 முதல், 7:30 மணிக்குள் பத்து ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இரு கோவில்களிலும், 13 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ