உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1,650 கிலோ அரிசி பவானியில் பறிமுதல்

1,650 கிலோ அரிசி பவானியில் பறிமுதல்

ஈரோடு: பவானி அருகே சரக்கு வாகனத்தில், 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். பவானி அருகே, ஊராட்சி கோட்டை பகுதியில் ரேஷன் அரிசியை விற்பனை செய்வதற்காக கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், எஸ்.ஐ., மூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக அந்தியூரில் இருந்து பவானி சாலையில் சந்தேகப்படும்படியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில், 33 மூட்டைகளில், 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.வாகனத்தை ஓட்டி வந்தவர் அந்தியூர் ஏரித்தோட்டம் பகுதியை சேர்ந்த வாசு என்ற வாசுவகுமார், 32, என்றும், பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகா மாநிலம் கொள்ளேகாலுக்கு விற்பனைக்காக கடத்தி செல்வதை ஒப்புக்கொண்டார். வாசுவகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1,650 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை