உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு ஒதுக்கீட்டில் 182 பள்ளிகளில் 1,725 மாணவ, மாணவிகள் சேர்க்கை

அரசு ஒதுக்கீட்டில் 182 பள்ளிகளில் 1,725 மாணவ, மாணவிகள் சேர்க்கை

ஈரோடு:தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை ஏழை மாணவ, மாணவிகள் பயிலும் வகையில் அரசு, 25 சதவீத ஒதுக்கீடு வழங்கியுள்ளது.இதன் அடிப்படையில் எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது.பிற சமூகத்தினர் குடும்ப ஆண்டு வருவாய், 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு குடும்ப ஆண்டு வருவாய் வரம்பு இல்லை.இதன்படி மாணவர் சேர்க்கை நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 182 தனியார் பள்ளிகளில், 1,725 மாணவ, மாணவியர் நடப்பாண்டு சேர்ந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிளஸ் 2 வரை தற்போது சேர்ந்துள்ள பள்ளியிலேயே கல்வியை விரும்பும் பட்சத்தில் தொடரலாம். இதற்கான கல்வி உதவி தொகையை அரசு அளித்து விடும் என்று பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ