உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 2,670 வாகனங்களில் சோதனை

மாவட்டத்தில் 5 மணி நேரத்தில் 2,670 வாகனங்களில் சோதனை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், 87 இடங்களில் ஐந்து மணி நேரம் போலீசாரால் நடத்தப்பட்ட சோதனையில், 2,670 வாகனங்கள் உட்படுத்தப்பட்டன.தமிழகத்தில் குற்ற சம்பவங்களை மேற்கோள் காட்டி அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு சேர, விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் போலீஸ் வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.இதன்படி மாலை, 4:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை ஒரு பிரிவாகவும், 7:00 மணி முதல் 9:00 மணி வரை மற்றொரு பிரிவாகவும் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 87 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,800 டூவீலர், 870 நான்கு சக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குடிபோதை வாகன இயக்கம், 28, ஹெல்மெட் இல்லாமல் சென்றதாக, 563, அதிவேக வாகன இயக்கம், 31, பிற இனங்கள், 406 என, 1,028 வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்கப்பட்டது. போதையில் ஓட்டி வரப்பட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ