உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 நாள் வாக்காளர் முகாமில் பெறப்பட்ட 30,051 படிவம்

2 நாள் வாக்காளர் முகாமில் பெறப்பட்ட 30,051 படிவம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த நவ., 4க்கு முன், 19 லட்சத்து, 97,189 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த, 19 ல் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 3 லட்சத்து, 25,429 வாக்காளர் நீக்கப்பட்டனர். 46,400 வாக்காளர்களின் விபரம், 2002 வாக்-காளர் பட்டியலுடன் ஒத்து போகாததால், அவர்களுக்கு படிவம் வழங்கி, உரிய ஆவணங்களுடன் திரும்ப பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கடந்த, 27, 28ல் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள, 2,379 ஓட்டுச்சாவடிகளிலும் நடந்-தது. இதில், 27ல், 14,177 விண்ணப்பம், 28ல், 15,874 விண்-ணப்பம் என, 30,051 படிவங்கள் உரிய ஆவணங்களுடன் பெற்-றுள்ளனர். தவிர ஆன்லைனில் பதிவான படிவங்களையும் பதிவி-றக்கம் செய்து, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், உரிய விலா-சத்தில் விசாரித்து அவர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ