உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெள்ளகோவில் அருகே 4 மாடுகள் திருட்டு

வெள்ளகோவில் அருகே 4 மாடுகள் திருட்டு

காங்கேயம்: வெள்ளக்கோவில் அருகே உள்ள பொன்பரப்பியை சேர்ந்தவர் பிரதிப் குழந்தைவேல், 33; பெற்றோருடன் விவசாயம் செய்து வருகிறார். ஓலப்பாளையத்தில் உள்ள தோட்டத்தில், 50 செம்மறி ஆடு, 13 மாடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஏழு மாடுகளை தோட்டத்து சாலையில் கட்டி இருந்தார். ஆறு மாடுகளை தோட்டத்தில் மேய்த்து விட்டு அங்கேயே கட்டியிருந்தார். நேற்று காலை தோட்டத்தில் கட்டியிருந்த நான்கு மாடுகளை காணவில்லை. இதன் மதிப்பு, 1.௫௦ லட்சம் ரூபாய். புகாரின்படி வெள்ளகோவில் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை