ஈரோடு,:ஈரோட்டில் நேற்று, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 3 பேரிடம் பணம் பறிமுதல் செய்தனர்.*
ஈரோடு அடுத்த வெள்ளோடு பகுதியில், பைக்கில் வந்த அரச்சலுாரை அடுத்த
அனுமன்பள்ளி, எல்லை காளிபாளையத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் ஒரு
லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.* ஈரோடு, நசியனுார்
நாராயணவலசு பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம், 80,000
ரூபாய்; திண்டல் அருகே வீரராஜ் என்பவரிடம், 66,620 ரூபாய்;
குமலன்குட்டை அருகே சசிகுமார் என்பவரிடம், 2.36 லட்சம் ரூபாயை
பறிமுதல் செய்தனர். ஈரோடு வெட்டுக்காட்டு வலசு வடிவேலிடம், 3 லட்சம்
ரூபாய், கள்ளியங்காடு கார்த்திகேயனிடம், 79,200 ரூபாயை பறிமுதல்
செய்தனர். கடந்த நான்கு நாளில் மாவட்ட அளவில், 43 லட்சத்து, 73
ஆயிரத்து, 818 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.* பவானி அருகே பெரிய
புலியூரில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஹரி தலைமையில், நேற்று மாலை
தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக ஈரோட்டில் இருந்து காரில்
வந்த விஜயகுமார் என்பவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல், ௧.௩௩ லட்சம்
ரூபாய் இருந்தது. பணத்தை கைப்பற்றிய பறக்கும் படை அலுவலர்கள்,
கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜனிடம்
ஒப்படைத்தனர்.