உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாடு மேய்க்க சென்றவர் யானை மிதித்து பலி

மாடு மேய்க்க சென்றவர் யானை மிதித்து பலி

அந்தியூர் : அந்தியூர் வனப்பகுதியில், மாடு மேய்க்க சென்றவர் யானை மிதித்து பலியானார்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பென்னாச்சியம்மன் கோவில் குளம் அருகே உள்ள வனப்பகுதியில், நேற்று முன்தினம் மதியம் பர்கூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆண் யானை ஒன்று, ஒருவரை தாக்கியுள்ளது. அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பர்கூர் போலீசார் விசாரணை நடத்தியதில், பர்கூர் அருகே பெஜிலிட்டியை சேர்ந்த மாதன், 51, என்பதும், இவர் மாடுகளை வனப்பகுதியில் மேய்த்துக்கொண்டு இருந்த போது, யானை மிதித்து இறந்ததும் தெரியவந்தது. பர்கூர் போலீசார், அந்தியூர் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ