| ADDED : நவ 15, 2026 06:23 AM
ஈரோடு:எஸ்.சி.,
- எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட பாதுகாப்பு குழு - தமிழ்நாடு
சார்பில், ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் தலைமை வகித்தார். தமிழ் புலிகள் மத்திய மாவட்ட செயலர் சிந்தனை
செல்வன், பிற அமைப்பு நிர்வாகிகள் பாட்டன் சக்திவேல், ஆறுமுகம்,
சவுந்தர் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் மோகன் பேசினார்.தமிழகத்தில்
தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்படி, 2015 - 2025 வரை, 11,117 வழக்கு
பதிவாகி, 3,611 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோர்
விடுவிக்கப்பட்டனர். இத்தீர்ப்புக்கு எதிராக
உயர்நீதிமன்றத்தில், 13 மேல்முறையீட்டு மனுக்களே தாக்கலாகி, 3
சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய
முடிவுக்கான காரணங்களை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்து, சட்ட
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தில் இதற்காக தனி
நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்காக வரும்,
28ல் ஈரோட்டில் கருத்தரங்கு நடத்தி, மாநில அளவில் எஸ்.சி., - எஸ்.டி.,
அனைத்து பிரிவு தலைவர்களை ஒருங்கிணைக்க தீர்மானம் நிறைவேற்றினர்.