உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி டி.சி.எஸ்., நிறுவனத்துடன் ஒப்பந்தம்

திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி டி.சி.எஸ்., நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஈரோடு:ஈரோடு, திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரி, உலக அளவில் தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணியில் உள்ள டி.சி.எஸ்., (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வேலை வாய்ப்பு நாள் நிகழ்ச்சி கல்லுாரியில் நடந்தது. விழாவுக்கு கல்லுாரி செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். டி.சி.எஸ்., நிறுவனத்தின் கல்வி கூட்டணி மற்றும் கல்வி இடைமுக திட்டங்களின் உலகளாவிய தலைவர் டாக்டர் சுசீந்திரன், பிராந்திய தலைவர் ஸ்டீபன் மோசஸ் தினகரன் பங்கேற்றனர்.கல்லுாரியில் 'பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் காக்நிடிவ் சிஸ்டம்' பாடப்பிரிவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.நிகழ்ச்சியில் டாக்டர் சுசீந்திரன் பேசுகையில், டி.சி.எஸ்., நிறுவனத்தில், 2.6 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் உள்ளே வரும் ஊழியர்கள், ஒரே ஆண்டில், 7 லட்ச ரூபாய் ஊதியம் வாங்கும் அளவுக்கு வாய்ப்புள்ளது.கடந்த, 2023-௨4ம் கல்வியாண்டில் டி.சி.எஸ்., நிறுவனத்தில் பணியாணை பெற்ற, 74 மாணவிகள், அசன்ஜர், கேஜிஐஎஸ்எல் உள்ளிட்ட, 25 நிறுவனங்களில் 1,266 பணியாணை பெற்ற மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். பள்ளி முதல்வர் ஜெயந்தி, வேலை வாய்ப்பு பிரிவு அலுவலர்கள் லோகநாதன், செல்வி, ராஜா, புதிய பாடப்பிரிவின் தலைவராக பொறுப்பேற்கும் முனைவர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை