உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அனைத்து அலுவலர், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து அலுவலர், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று, தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்துடன், ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் சோமசுந்தரம், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுப்பிரமணியம், வெங்கிடு, தேவி, ஸ்ரீதர், சக்திவேல் உட்பட பலர் பேசினர்.தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, தி.மு.க., அரசு அமலாக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நுாலகர்கள், பொது சுகாதாரம், போலீஸ், பொது நுாலகம், மாநகராட்சி, நகராட்சி உட்பட பல துறைகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர், பண்ணை பணியாளர், ஓட்டுனர்கள், வருவாய் கிராம உதிவியாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணியாளர் போன்றோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை