உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

-பெருந்துறை: பெருந்துறை அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருந்துறை ஒருங்கி-ணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் பெருந்துறை வட்டார செயலாளர் தனலட்சுமி தலைமை வகித்தார். அங்கன்வாடி பணி-யாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும் என்-பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.* ஈரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி மாநகராட்சி பள்ளி அருகே, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், கிளை செயலர் பாத்திமா தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.* வட்டார தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி-யாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ராதாமணி தலை-மையில், நம்பியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். டி.என்.பாளையத்தில் வட்டார தலைவர் பூங்கொடி தலைமையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு-வலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ