உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எரிசாராய ஆலை மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி முறையீடு

எரிசாராய ஆலை மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தி முறையீடு

ஈரோடு: பவானி, சின்னபுலியூர், பெரியபுலியூர், வைரமங்கலம், எலவ-மலை கிராமத்தினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:பண்ணாரி சர்க்கரை ஆலைக்கு சொந்தமான எரி சாராய ஆலை, 50 ஆண்டாக சின்னபுலியூரில் செயல்படுகிறது. ஆலை கழிவு நீரை, ஆலையில் இருந்து, 1 கி.மீ.,க்கு அப்பால், பவானி ஆற்-றங்கரையில் குட்டை வெட்டி தேக்கி ஆற்றில் வெளியேறுகிறது. ஆற்று நீர், நிலத்தடி நீரை பயன்படுத்தும் மக்கள் பாதிக்கின்றனர். கழிவு நீர் ஆற்றில் கலக்கக்கூடாது என வலியுறுத்தியும் தடுக்கப்ப-டவில்லை. மக்கள் போராட்டத்தால் இவ்விடத்துக்கு கழிவு நீரை அனுப்பாமல், ஆலை வளாகத்தில் குழி வெட்டி தேக்குகின்றனர். தவிர லாரிகளில் எடுத்து சென்று, தொலைதுார கிராமங்களில் வெளியேற்றுகின்றனர். இவ்வாறான செயலால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கின்றனர். நிலத்தடி நீர், குடிநீர், விளை நிலங்கள், கால்நடைகள் வரை பாதிக்கப்பட்டு, கடும் துர்நாற்றம், காற்று மாசுபாடு, மூச்சு திணறல் என தொடர்வதை தடுக்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை