உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

பெருந்துறை : பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லுாரியில், பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். கோவை இசட்.எப். நிறுவன மூத்த பொது மேலாளர் ஸ்ரீதர் சூரியநாராயணன், மேலாளர் திவ்யா மணிகண்டன், மனித வள மேம்பாட்டு அதிகாரி பிரனேஷ், பணி நியமன ஆணைகளை வழங்கினர்.துாத்துக்குடி ஸ்பிக், சென்னை என்.சி.ஆர்., ராயல் என்பீல்ட், சென்னை ஆர்.சி.பார்மா, ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட, 45 நிறுவனங்களில் தேர்வான, 422 மாணவ-மாணவியருக்கு, அவர்களின் பெற்றோர்களிடம் பணி நியமன ஆணை வழகப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை அலுவலர் சென்னியப்பன், அனைத்து துறை தலைவர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை